இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் விஜயத்தின் போது ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை கடுமையான இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பிரதமர் இம்ரான் கானின் குறித்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.
பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.