பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்து வெளியான திரைப்படம் தளபதி விஜய்யின் மாஸ்டர்.
இப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தை நடிக்க தயாராகியுள்ளார் நடிகர் விஜய்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் வில்லாக யார் நடிக்க போகிறார்? கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்று தற்போதே ரசிகர்கள் கேட்க்க துவங்கிவிட்டனர்.
மேலும் தளபதி 65 படத்தில் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹேக்டே நடிக்க போகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி நடிக்க போகிறார் என சமூக வலைத்தளத்தில் கிசுகிசுப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணமே மாஸ்டர் படத்தின் பதிவு ஒன்றை லைக் செய்துள்ளார். இது தான் முக்கிய காரணமாக இருக்கக்கூடுமோ என கூறப்படுகிறது.