More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!
Feb 11
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது. அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால், அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறதென இ.தொ.கா.  உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



அந்த பதிலடி, 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.



இந்தப் 13 நாட்கள் வேலை விடயம் தொடர்பில், பெருந்தோட்டக் கம்பனிகள் இதுவரையில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் சில தொழிற்சங்கங்களே, பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடகப் பேச்சாளர்களாக மாறி இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருகின்றன என்றும் தெரிவித்தார்.



13 நாட்கள்தான் தொழிலாளர்களுக்கு கம்பனிகள் வேலை வழங்குமாக இருந்தால், மிகுதி 17 நாட்களுக்கும், வெளித் தோட்டங்களில் இருந்தேனும் தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அவ்வாறு வெளித் தோட்டங்களிலிருந்து அழைத்து வந்தால் ஆயிரம் ரூபாய் சம்பளத்தோடு தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவுக்கான செலவுகளையும் ஏற்று ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 1,500 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைச் செலவழிக்க எந்தக் கம்பனி தயாராக இருக்கும்?



அதனால், அந்த 13 நாட்களுக்கு மாத்திரம் குத்தகையைச் செலுத்துமாறும் ஏனைய 17 நாட்கள் தொழிலாளர்களின் பெயர்களில் குத்தகையைச் செலுத்தி தோட்டங்களை நடத்துவோம் என்றும் மிகுதி 17 நாட்களும் கம்பனிகள் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.



எவ்வாறாயினும் இத்தனை நாள்கள் வேலை வழங்க வேண்டுமென்று, கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளது. அந்த வழமையைக் கம்பனிகள் மாற்ற முடியாது. இன்றைய நிலைமைக்கேற்ற வேலைக்குத்தான் நாங்கள் இந்தச் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கூடுதல் வேலையாக இருந்தால், கூடுதல் சம்பளத்தைக் கோரியிருப்போம் என்றும் அவர் எடுத்துரைத்தார். அப்படி அவர்கள் வழமையை மாற்றினால் 16 கிலோ கிராம் பறிக்கப்படும் கொழுந்து 6 கிலோகிராமாகவும் 18 கிலோகிராம் பறிக்கப்படும் கொழுந்து 8 கிலோகிராமாக மாறும். இதனால் கம்பனிகளின் உற்பத்தியே பாதிக்கப்படும் என்றும் செந்தில் தொண்டமான் எச்சரித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு போராட்டம் என்பது புதிதல்ல. அதனால் எப்படியேனும் மக்களுக்குக் கொடுக்க வேண்டியதை இ.தொ.கா பெற்றுக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் தொடர்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, ரமேஸ் பத்திரன ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் எக்காரணம் கொண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாதென அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை

Feb15

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள

Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Feb07

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம

May30

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்

Apr08

கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Feb11

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநிய

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Apr04

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத

Feb21

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத

Sep21

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன

Oct23

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று

Oct05

அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு

Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி