More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!
ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!
Feb 24
ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.



பல்வேறு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் புதுச்சேரி வந்து மீனவ மக்களை சந்தித்தார்.



வருகிற 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார். 27-ந் தேதி தனி விமானத்தில் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.



திறந்த வேனில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அவர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.



27-ந் தேதி இரவு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ராகுல்காந்தி பேசுகிறார்.



இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் செய்து வருகிறார்.



மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது. ராகுல்காந்தியின் முழுமையான சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 3-வது கட்டமாக ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று காங்கிரஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May07

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக

Jun26

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n

May09

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Jun25