கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
818 வேயங்கல்ல கிழக்கு மற்றும் 818 – A வேயங்கல்ல மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.