More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் பலி - 200 கைதிகள் தப்பி ஓட்டம்
சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் பலி - 200 கைதிகள் தப்பி ஓட்டம்
Feb 28
சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் பலி - 200 கைதிகள் தப்பி ஓட்டம்

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் 1500க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்



இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல கூலிப்படை தலைவன் அர்னல் ஜோசப் என்ற கைதியும் அவரது கூட்டாளிகளும் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.‌ அவர்கள் சிறை அதிகாரி மற்றும் சிறைகாவலர்களை சரமாரியாக தாக்கியதோடு துப்பாக்கியாலும் சுட்டனர்.



இந்த கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அர்னல் ஜோசப் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.



செல்லும் வழியில் அவர்கள் சிறைக்கு அருகே உள்ள கடைகளில் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.



இதற்கிடையில் கலவரம் நடந்த சிறைக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தி சிறை முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.‌



இதனிடையே கூலிப்படை தலைவன் அர்னல் ஜோசப் மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். எனவே போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.‌ சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் இதுவரை 40 பேர் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறைகளில் அடைக்கப்பட்டதாகவும், எஞ்சிய கைதிகளை பிடிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ

Mar18

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா

Jul16

உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள

Jun09

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும

Jun18

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி

Sep19

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற

Mar27

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட

Feb22

ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச

Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா

Nov12

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்

Feb02

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பருவநிலை ஆ

Mar29

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு

Mar26

அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ

Apr02

இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ