More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி நேரில் ஆய்வு!
வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி  நேரில் ஆய்வு!
Mar 03
வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில், இன்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், கீழதட்டப்பாறை மற்றும் மேல தட்டாப்பாறை ஆகிய இடங்களில் தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெடி மருந்துகள் வாங்கி செல்வர்.



இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின்போது, வெடிமருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்த அவர், வெடி மருந்துகளை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே விற்பனை வேண்டும் என்றும், வருவாய் துறையினரிடம் உரிய சான்று பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



மேலும், முன் பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்பனை அவற்றை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு எஸ்ஐ நம்பிராஜ், தட்டப்பாறை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும

Sep06

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா

Sep08

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Mar12

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Oct24