More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முகேஷ் அம்பானியின் வீட்டு அருகே வெடிபொருட்களுடன் நின்ற மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டது!
முகேஷ் அம்பானியின் வீட்டு அருகே வெடிபொருட்களுடன் நின்ற மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டது!
Feb 26
முகேஷ் அம்பானியின் வீட்டு அருகே வெடிபொருட்களுடன் நின்ற மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டது!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின்  ‘அன்டிலா' அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடமாகும். இந்தியாவில் மிக விலையுர்ந்த வீடாக இது கருதப்படுகிறது.



இந்நிலையில், இந்த வீட்டின் அருகே உள்ள கார்மிக்கேல் ரோட்டில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமாக ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது.



அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த மர்ம காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.  மும்பை குற்றப்பிரிவு போலீசார், மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் விரைந்து வந்தனர்.



இதையடுத்து காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. முகேஷ் அம்பானி வீட்டுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.



முகேஷ் அம்பானி வீ்டு அருகே ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய காரை நிறுத்தி சென்றது யார்? என தெரியவில்லை. பயங்கரவாத சதி வேலைக்காக அந்த கார் நிறுத்தப்பட்டதா? அல்லது மிரட்டல் விடுப்பதற்காக நிறுத்தப்பட்டதா? என்பது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் காரை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதுதொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் இருந்து ஒரு ஸ்கார்பியோ வேனில்  ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என தெரிவித்தார்.



முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் காாில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தாராளமாக மணல்கொள்ளை அடிக்

Jul10

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா

Feb26

2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ

Mar31

வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக

Jun11

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo

Mar08

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட

Aug12

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள

Apr04

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Sep25

தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ

Jul26

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்

Jun22