மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி விவசாயிகள் முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார்கள்.
டெல்லியின் எல்லைகளை அவர்கள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம், நேற்று 100-வது நாளை எட்டியது.
இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் பிற மாநில விவசாயிகள் குவிவதை தடுக்க சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதை சாடி உள்ளார்.
இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், “நாட்டின் மகன்கள் எல்லைகளில் உயிரை பணயம் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் இரும்பு நகங்களை பதித்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதான பிரபுக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். மத்திய அரசோ அட்டூழியங்கள் செய்கிறது” என கூறி உள்ளார்.