More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா
மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா
Mar 13
மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா

மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது.



கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.



ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை துப்பாக்கி சூட்டில் 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியான்மர் ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.



இந்த நிலையில் ராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



இது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ் கூறும்போது, ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ என்றார்.



மியான்மரில் ராணுவ ஆட்சியின் கீழ் செயல்பட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்களது குடும்பத்துடன் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளனர். இதற்கிடையே மியான்மரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May11

அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து

Sep20

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது

Feb07

சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ

Apr19

இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க

Jan25

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர

Mar24

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே

Mar07

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது

Aug26

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர

Jun12

 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய

Apr18

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப

Jan27

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்  கொரோனாத

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

Feb28

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட

Apr22

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம