எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டது. 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் முதற்கட்டமாக 21 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில், கொரோனாவால் மறைந்த வசந்தகுமார் எம்.பி மகன் விஜய் வசந்த் போட்டி என அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டது.
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இன்னும், விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை
இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

