More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஓட்டு இரட்டை இலைக்கு போட்ருங்க!- தங்க தமிழ்ச்செல்வன்
ஓட்டு இரட்டை இலைக்கு போட்ருங்க!- தங்க தமிழ்ச்செல்வன்
Mar 18
ஓட்டு இரட்டை இலைக்கு போட்ருங்க!- தங்க தமிழ்ச்செல்வன்

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது போல இரண்டு விரல்களை காட்டி சென்றார்.



தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிந்து வேட்புமனுதாக்கல், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக முதற்கட்டமாக 6 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஓபிஎஸ் போடிநாயக்கனூரில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இதுவரை தோல்வியை கண்டிராத ஓபிஎஸ், கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் போடி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தினார். இந்நிலையில் அங்கு வெற்றியை பெற தங்க தமிழ் செல்வன் செல்வன் தீவிரமாக முயற்சித்துவருகிறார்.



இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் தங்க தமிழ்ச்செல்வம் வேட்பு மனுதாக்கல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என சொல்வது போல இரட்டை விரலை காட்டியபடி சென்றார். இதனை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உதய சூரியனுக்கு அவர் வாக்களிப்பாரா இல்ல பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கே வாக்களிப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Feb09

இந்தியாவின்   கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம

Mar01

பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி

Apr10

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக

Apr19

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த

Feb04

சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என

Aug10

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Jun20

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Jun21