இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களால், இலங்கை இளைஞர்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தல் மற்றும் அவர்களின் சேவையினை உலகறியச் செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை தினத்தில் தன்னார்வலர்கள் தினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், இன்றைய நாளில் முதலாவது தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களினால் மாவட்ட ரீதியாக தொண்டர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அதே போல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி ஶ்ரீமேனன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள பிரதான வீதியில், காலை 09.00 மணி தொடக்கம் சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இச் செயற்பாட்டில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.
