More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
Mar 24
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



உலகில் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.



நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற  சுங்கக்  கட்டளைச் சட்டம் மீதான விவாத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,



2018, 2019ஆம் ஆண்டுகளில் எல்லையற்ற அரச வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வரிக் கொள்கைகளை அரசு மாற்றியது. மக்களால் அந்த வரி சுமையை சுமக்க முடியாது போனது. புலிகள்  இருக்கும் தருணத்தில்கூட புறக்கோட்டை கடைத் தொகுதிகள் மூடப்படவில்லை. ஆனால், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டதால் புறக்கோட்டை கடைத்தொகுதி ஒருநாள் மூடப்பட்டது. போராட்டத்தை முடக்குவதற்காக மூன்று கடைகளை அப்போதைய நிதி அமைச்சர் சீல் வைக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.



எமது அரசாங்கம் அமையப்பெற்றதும் சுங்க வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.தேசிய உற்பத்தியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பல தீர்மானங்களை எடுத்திருந்தோம். தீர்வை வரியை குறைத்து செஸ் வரியின் மூலம் தேசிய உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துள்ளோம். உலக சனத்தொகையான 7.8 பில்லியனில் 128 மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 27 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியதர வருமானங்களை பெற்றவர்கள் 30 வருடங்களின் பின்னர் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர். கொவிட் தொற்று உலகப் பொருளாதாரத்துக்கு   இரண்டாம் உலகப் போரைவிடவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



யுனிசெப்பின் அறிக்கையின் பிரகாரம் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது. ஜனாதிபதியின்  தலைமையின் கீழ் அரசு  பல்வேறு  சலுகைகளை மக்களுக்குப்   பெற்றுக்கொடுத்துள்ளது. வற் வரி குறைக்கப்பட்டதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டது. உழைப்புக்கான வரியையும் குறைத்துள்ளோம். அதேபோன்று வருமான வரி மற்றும் பொருட்களுக்கான வரியையும் குறைத்துள்ளோம். வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் அரச சேவையில் உள்வாங்கியுள்ளோம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Mar08

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Feb13

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ

Jan26

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ

Jun08
Feb09

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக

Sep23

நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க

Oct17

உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர

Aug31

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க

Feb10

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை

Oct25

வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற