More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தம் அவசியம் - மாவை
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தம் அவசியம் - மாவை
Mar 31
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தம் அவசியம் - மாவை

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டுவருவதில் அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.



இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது. என்ன திருத்தம் என்பது தொடர்பான பிரேரணையினை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கின்றபோது அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பார்கள். அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படும்போது அது தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.



அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சி ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் தீர்மானம் எடுக்கும். தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும். முதலாவதாக மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்ற உறுதிப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில்கூட அது சொல்லப்பட்டுள்ளது.தேர்தல் முறையில் பல பிழைகள் காணப்படுகின்றது. எல்லை நிர்ணயம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எதை அரசாங்கம் முன்வைக்கப்போகின்றது என்பதை அறிந்த பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து எங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவோம்.



ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலினால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் மீது பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில்ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது சொல்லப்படவில்லையென்பது இன்று விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பல குறைபாடுகளை கண்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உண்மையான விடயங்களை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.



அதனை நாங்களும் ஏற்றுக்கொண்டு அதில் என்ன தவறு இருக்கின்றது, எது திருத்தப்படவேண்டும், உண்மை என்ன என்பது தொடர்பில் ஆண்டகையின் வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கின்றது.



அந்த அறிக்கை முழுமையாக தாயாரிக்க்ப்பட்டுள்ளதா,முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் நாடாளுமன்றத்திலேயே எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பிலான குறைபாடுகளை எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பான விவாதத்தின்போது கருத்துகளை முன்வைப்பார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய

Mar18

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி

Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட

Mar14

தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு

Oct02

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப

Oct01

அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்

Jun12

ரேஷன் முறை அறிமுகம்

சாத்தியமான சமமான விநியோகத்தை

Jan24

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,

Mar17

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந

Feb12

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன

Oct17

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை

Mar02

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச