More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நான்கு முறை திருமணம்.... அதுவும் வெவ்வேறு நபருடன் - வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
நான்கு முறை திருமணம்.... அதுவும் வெவ்வேறு நபருடன் - வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
Apr 02
நான்கு முறை திருமணம்.... அதுவும் வெவ்வேறு நபருடன் - வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. 



இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது. 



இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன. 



இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct11

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்

Apr03

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப

Jul25

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண

Oct25

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள

Aug30

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி

May24

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Jun12

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ

Apr12

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந

May02

நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.

Jan18

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு

Jul15

ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '

Jul07

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற

Apr26

கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்

Mar09

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன

Feb14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு