வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வரையான வீதி துரித காபெற் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 வீதிகளின் விபரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ். ராதாகிருஸ்ணனால் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபனேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சங்கானை ஆஸ்பத்திரி வீதி, சில்லாலை லூர்த்து மாதா வீதி, பண்டத்தரிப்பு அம்மன் வீதி, பிரான்பற்று 4ஆம் குறுகு தெரு, அமிர்தலிங்கம் வீதி, மாதகல் நாவலர் வீதி, இளவாலை உடையார் வீதி, மாரிசன் கூடல் வீதி, கட்டுடை வீதி, மானிப்பாய் மெமோறியல் வீதி, ஆனைக்கோட்டை யூனியன் வீதி, சுதுமலை மூனாமலை வீதி, மானிப்பாய் ஆனந்தா வீதி என்பனவே காபெற் வீதியாக மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இதற்கான மதிப்பீடுகளை பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.