More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர் இராணுவம் மீது பொய் பிரச்சாரங்கள். - இராணுவ தளபதி
புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர் இராணுவம் மீது பொய் பிரச்சாரங்கள். - இராணுவ தளபதி
Apr 13
புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர் இராணுவம் மீது பொய் பிரச்சாரங்கள். - இராணுவ தளபதி

யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த வீட்டினை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டு வீட்டினை கையளித்தார்.



அத்துடன் இராணுவத்தினர் வீட்டை மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப் பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார்.



அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை இராணுவத்தினர் வழங்கி வைத்துள்ளனர்.



இங்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி



புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கும் சிலர் ராணுவம் மீது பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள்.



இன்றையதினம் யாழ்.பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இழந்த ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம். அவர் தனது கணவனை இழந்த பின்னரும்



தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்துவரும் நிலையில் ராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடானது இன்றைய தினம் கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.



இராணுவத்தினர் வீட்டை மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப் பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார்.



அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அத்தோடு மேலதிகமான அந்த மாணவிக்கு உரிய கல்வி செயற்பாடுகளுக்கு உதவ தயாராகவுள்ளோம்.



புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம்.



அதனை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.



ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும் ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி வருகிறவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றார்கள் இங்கு ராணுவம் கொடுமையானது ராணுவம் இங்கே தேவையற்றது என ஆனால் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம் அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததை யிட்டு இலங்கை ராணுவத்தினர் ஆகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.



யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நான் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்



அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன் அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன் எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep09

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்  என தமிழர் வ

May11

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு

Jan25

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்

Oct23

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று

Feb02

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள

Mar26

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு

Mar04

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்

Sep23

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Apr04

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன

Mar03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Feb02

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்

Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப

Oct21

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள

Jan22

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி