More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காரில் வந்த வாலிபர் திடீரென கத்தியால் தாக்குதல் போலீஸ் அதிகாரி கொலை!
காரில் வந்த வாலிபர் திடீரென கத்தியால் தாக்குதல்  போலீஸ் அதிகாரி கொலை!
Apr 04
காரில் வந்த வாலிபர் திடீரென கத்தியால் தாக்குதல் போலீஸ் அதிகாரி கொலை!

அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் கார் ஒன்று பாதுகாப்பு தடுப்புகளை மோதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது.



உடனடியாக பாதுகாப்பு போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அதிலிருந்து இறங்கிய வாலிபர், கத்தியால் அருகிலிருந்த போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.இதில், 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த வாலிபரை சுட்டுக் கொன்றனர். அவர், இண்டியானா மாகாணத்தை சேர்ந்த நோவா கிரீன் (25) என்பது தெரியவந்துள்ளது.



 ‘நேஷன் ஆப் இஸ்லாம்’ என்ற  மதவாத அமைப்பை சேர்ந்த அந்த வாலிபர், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காயமடைந்த போலீசாரில் வில்லியம் பில்லி இவான்ஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



கடந்த ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்

Mar22

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

Mar29

ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய

May08

மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத

Jun10

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து

Jul14

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இன்று ஆ

Jul31

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்

Oct19

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக

Mar17

வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,

Apr01

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான

May15

அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்

Jun19