More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 60 சதவீதமாக உயர்த்துவது ஏன் -ஈரான் அதிபர் அளித்த விளக்கம்
60 சதவீதமாக உயர்த்துவது ஏன் -ஈரான் அதிபர் அளித்த விளக்கம்
Apr 14
60 சதவீதமாக உயர்த்துவது ஏன் -ஈரான் அதிபர் அளித்த விளக்கம்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலகுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தார்.



அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.



மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



பின்னர் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிய அதிபர் ஜோ பைடன் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவைப்பட்டால் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. எனினும், ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.



இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியது. 



யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிவிபத்தை குறிப்பிட்டு பேசிய அவர், ‘நீங்கள் (இஸ்ரேல்) செய்தது அணுசக்தி பயங்கரவாதம், நாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது’ என்றார்.



அணு ஆயுதங்ளை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்பதால் அந்த இலக்கை நோக்கி ஈரான் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை ஈரான் மறுத்துள்ளது. 



அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் செறிவூட்டலை 3.67 சதவீதமாக வைத்திருப்பதாக உறுதியளித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் செறிவூட்டலை 20 சதவிகிதம் வரை அதிகரித்தது. மருத்துவ நோக்கங்களுக்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்று ஈரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்

Oct09

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு

Jun22

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி

Aug31

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு

Mar18

உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்

Apr14

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய

Apr04

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில

Feb18

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க

Jun06

 ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்

Feb28

சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கச

Apr23

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய

Oct14

உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்

May27

  ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்

Jul10

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க