More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு
போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு
Apr 21
போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கைகள் ஆகியவற்றை வினியோகிக்குமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.



இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில், ஆஸ்பத்திரிகள் திண்டாடி வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.



இந்தநிலையில், முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ரஜத் தத்தா, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-



மூன்று படையினரும் நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும்.



உதாரணமாக, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதலாக தேவைப்படும் படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவை இப்பணியில் ஈடுபட வேண்டும்.



அதுபோல், கொரோனா பரவல் காலத்தில், தேவையான மருத்துவ சாதனங்களை வாங்க முப்படையினருக்கு நிதி அதிகாரம் அளிக்கப்படுகிறது.



இவ்வாறு அவர் பேசினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன

Sep15

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை

Aug28

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி

May22

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச

Jul22

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.

May16

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

Feb17

உத்தர  பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி

Jan23

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா

Sep24

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ

Aug11