More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!
கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!
May 08
கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டி, வத்தளை, ஹேகித்தை மற்றும் பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், மாபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கெரங்ஹா பொக்குன, கல்லுடுபிட, மத்துமஹல ஆகிய கிராம சேவகர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



களுத்துறை வடக்கு காவல்துறை அதிகாரப் பிரிவின் வித்யாசார கிராம சேவகர் பிரிவிலுள்ள போசிறிபுர பகுதியும் மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



மத்துகமை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டதொலுவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதேவேளை, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.



இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மகரகமை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட அரவ்வல மேற்கும், பிலியந்தலை காவற்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட நிவந்திடிய மற்றும் மாம்பே கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



அதேநேரம், காலி மாவட்டத்தின் ஹபராதுவை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட கொக்கல – 1 மற்றும் 2, மீஹாகொட, மல்லியகொட, பியதிகம மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு

Nov05

வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற

Aug21

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு

Sep30

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற

Feb12

நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ

Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Jan27

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச

Jun12

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்

May01

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந