More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை ஆலோசனை!
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை ஆலோசனை!
May 03
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை காணொலி காட்சி வழியே முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.



இதுதொடர்பாக, மத்திய வெளி விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து உயர்மட்ட அளவிலான நட்புறவை கொண்டுள்ளது.



உயர்மட்ட அளவிலான முக்கிய விஷயங்களை சீராகப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புகளால் அவை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.



அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாக்கம் அடையவும் மற்றும் வலுப்படவும் ஏற்ற வழியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கை 2030 வெளியிடப்படும்.



இவற்றில், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புப்படுத்தி கொள்ளுதல், வர்த்தகம் மற்றும் வளம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதார நலம் ஆகிய 5 முக்கிய விஷயங்கள் இடம் பெறும் என தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04
May04

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

May28

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம

Aug01

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்

Aug30