கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களும் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலும் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார பிரதேசத்தின் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் மற்றும் கடை தெருக்கள் உள்ளிட்ட பொது மக்களின் வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டனர்
