More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அடுத்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம்!
அடுத்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம்!
Jun 08
அடுத்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம்!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின்என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.



இந்த நிலையில் புளூ ஆரிஜின் நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தின் முதலாவது பயணத்தில், தான் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக ஜெப் பெசோஸ்அறிவித்துள்ளார்.



அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை விட தொடங்கியிருக்கிறது புளூ ஆரிஜின் நிறுவனம்.



இந்த ஏலம் வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், 3-வது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். அதில் அதிகபட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) ஏலம் கேட்டது தெரிய வந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க

Mar30

மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந

May28

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்

Sep27

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்

Apr25

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Dec28

பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம

Oct19

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

May25

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்

May04

உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்

Oct24

ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு

Feb24

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

May30

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ