More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
Jun 10
கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.





விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.





இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.





மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.





தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.





மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.





சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.





இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.





மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ

Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Feb02

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா

Jan15

இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Oct22

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன

Jan23

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி

Aug16

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Feb09

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க

Jan16

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Oct17

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை

Sep23

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ

May03

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப

Jan13

புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந