More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- சென்னையில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு பங்கேற்பு!
142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- சென்னையில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு பங்கேற்பு!
Jun 11
142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- சென்னையில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு பங்கேற்பு!

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகின்றன.



தற்போது நாட்டில் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது. தமிழகத்திலும் ரூ.100-ஐ நெருங்கி வருகிறது.



இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.



இதையும் படியுங்கள்... பெட்ரோல் நிலையங்கள் முன்பு நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- கே.எஸ்.அழகிரி அறிக்கை



அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.



சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சங்கம் தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் கோபண்ணா, செல்வம், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



அமைந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்க பாஷ்யம், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சென்னை முழுவதும் மொத்தம் 142 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug09

கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Jul31

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை

Apr21

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள

Feb20

பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்

Jul20