சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொரோனா தொற்றின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.