More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் கோட்டா! – சஜித் அணி சாடல்
கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் கோட்டா! – சஜித் அணி சாடல்
Jun 19
கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் கோட்டா! – சஜித் அணி சாடல்

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர்.



என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



ராஜபக்ச அரசு புதிய அரசமைப்பை ஒருபோதும் கொண்டுவராது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் ஒருபோதும் வழங்கவும் மாட்டாது. இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயம்.



ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியில் பேச்சு மேசைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் அழைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டனர்.



அதேபோல் இந்த ஆட்சியில் முதலாவது பேச்சைக்கூட நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏமாற்றியுள்ளார்.



முதலாவது பேச்சுக்கு முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



பேச்சு இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை.

ஆனால், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது உண்மை. எனினும், இறுதியில் அந்தப் பேச்சை நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.



ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால் தமிழர்களுக்கான தீர்வை நாம் வழங்கியே தீருவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவார் – என்றார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்

Sep24

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Feb23

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக

Feb02

பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ

May12

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்

May20

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Mar29

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ

Apr07

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண

Jun03

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52

Mar08

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம

Feb02

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப