More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
Jun 20
கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்கள் மங்களுர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்ரை மங்களூர் தனிப்படை காவல்துறையினர் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து இன்று விசாரணை செய்தனர். மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.



இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கள்ளதோணியில் கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ந் தேதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் மறுநாள் அதிகாலை ராமநாதபுரம் மாட்டம் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது கடந்த 11ந்தேதி மங்களூர் காவல்துறையினரால் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.



இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில் நான்கு பேரை மட்டும் காவல்துறை காவலில் எடுத்த மங்களூர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.



விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 4 இலங்கை தமிழர்களை ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதளை கடற்கரைக்கு அழைத்து வந்த மங்களூரை சேர்ந்த ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 7 பேர் கொண்ட தனிப்படை இலங்கையிலிருந்து எப்படி கடற்கரையில் வந்து இறங்கினார்கள், அங்கிருந்து எப்படி மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களை வைத்து ஒத்திகை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.



மேலும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை அடைக்கலம் கொடுத்து தங்க உதவிய முக்கிய குற்றவாளியான இம்ரான் கான் தலைமறைவாகியுள்ளதால் மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் சென்றனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.



விசாரணையில் இம்ரான் கான் ஒரு வாரத்திற்கு மேலாக மரைக்காயர்பட்டிணத்தில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அடுத்த கட்ட விசாரணை செய்வதற்காக தற்போது கைது செய்யப்பட்டு மங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 இலங்கைத் தமிழர்களை கடற்கரை வழியாக எங்கெல்லாம் அவர்கள் சென்றார்கள் யாரெல்லாம் சந்தித்தார்கள் என் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினரின் உதவியுடன் மங்களூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr28

2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த

Feb21

டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக

May25

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்

Aug04

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய

May29

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படு

Mar12

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க

May01

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந

May09

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Sep29

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்

Jul02

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண

Aug18

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3

Feb16

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்

Jan20

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில