More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் - பவித்ரா
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் - பவித்ரா
Jun 21
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் - பவித்ரா

மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் நாம் எந்தவொரு இடத்திலும் அரசமைப்பை மீறவேயில்லை.



என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.



வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகள் உட்பட 9 மருத்துவமனைகளை மத்திய அரசு தனக்குரியதாக்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இந்தச் செயற்பாடு அரசமைப்பை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. குறித்த மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்.



நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே மாகாண மருத்துவமனைகளைப் பொறுப்பேற்றது.



ஆனால், மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிரணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.



இது வெட்கக்கேடானது. முதலில் அவர்கள் நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களைப் படித்துவிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டும்.



மாகாண சபை நிர்வாகத்தை நடத்த முடியாமல் ஆட்சிக்காலத்தை வீணாக்கிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் தற்போது மத்திய அரசை நோக்கி கைவிரல் நீட்டுகின்றனர் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்

Mar07

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத

Mar12

இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி

Oct16

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ

Jul11

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Feb03

“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர

Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

Oct01

அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த

Oct02

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில

Feb02

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி

Feb02

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ

Jan01

2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க

Mar23