More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா உறுதி
இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா உறுதி
Jul 03
இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் - அமெரிக்கா உறுதி

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.



மேலும் தடுப்பூசிகள் அதிக அளவில் தயாரிக்கப்படும் நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டதால், இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை பகிர்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில் உலகின் 4-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 58,995 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் அங்கு 504 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.



இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இந்தோனேசிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அங்குள்ள மொத்த மக்கள் தொகையான 27 கோடியில் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.



இதனை தொடர்ந்து தற்போது ‘மாடர்னா’ நிறுவனத்தின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் வழங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் நேற்று இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்ரோ மார்சிடியை தொடர்பு கொண்டு பேசிய போது, விரைவில் இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun10

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து

Oct11

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா

Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Sep13

ஆப்கானிஸ்தானில் 

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட

Oct02

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ

Mar28

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி

Mar02

ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப

Jul31

பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா

Sep30

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ

Jan18

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா

Jul07

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு

Feb05

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது

Mar13

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள