More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கொலை மிரட்டல் விடுக்கிறார்... 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்!
கொலை மிரட்டல் விடுக்கிறார்... 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்!
Jul 04
கொலை மிரட்டல் விடுக்கிறார்... 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்!

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். 



முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.



இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், கணவர் வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராதா, பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.



இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராதா.



அந்த புகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக வசந்தராஜா கூறியதாகவும், போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகவும், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ

Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

Feb07

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்

Aug13

சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த

Apr22

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங

Jun08

விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ

May21

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப

Feb06

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா

Aug05

பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்

Feb11

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில

Jun25

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி

May15

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில

Sep27

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச

Jun22

நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி

Feb15

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத