More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது - பாஜக விமர்சனம்
நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது - பாஜக விமர்சனம்
Jul 04
நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது - பாஜக விமர்சனம்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது. இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. 



ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடா்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதன் மூலமாக நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 



ரபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக தன்னாா்வ  அமைப்பு ஒன்று பிரான்ஸில் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அதை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.



ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. இந்த ஒப்பந்தம் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காததால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்கட்சி தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக, நாட்டை வலுவிழக்கச் செய்ய அக்கட்சி முயன்று வருகிறது” என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த

Jul20

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Jan02

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

May14

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,

Mar31

வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக

Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Mar11

இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ

Mar29

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான

May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது

Jan28

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக

Jan01

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த

Jul06

சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே