More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் - ஜாக்கி சான்
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் - ஜாக்கி சான்
Jul 13
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் - ஜாக்கி சான்

ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.



தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல  திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



இதற்கிடையே, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.



சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது.



சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன் என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல

Sep20

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி

May18

ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக

Mar30

மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந

Mar23

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து

Mar23

உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Jul16

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச

Mar07

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க

May21

நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன

Mar20

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய

Sep04

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Mar19

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி