More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய எடப்பாடி!
சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய எடப்பாடி!
Jul 26
சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய எடப்பாடி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அவர்களுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தளவாய் சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அந்த சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.



அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் தெரிவித்தோம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம் என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், கட்டுக்கோப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக.



கட்சி தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. லாட்டரி சீட்டுகளை தமிழகத்தில் கொண்டுவர திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல்


கிடைத்தது. அதனடிப்படையில் அறிக்கை வெளியிட்டோம் என்று பேசினார். இதைத்தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் சசிகலா பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.





வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Dec29

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய

Jul24

கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ

Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Aug12

பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Jul21
Jul14

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க

Apr03

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்

Mar08

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.

Aug18