More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • முதல் டி20 போட்டியில் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்
முதல் டி20 போட்டியில் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்
Aug 04
முதல் டி20 போட்டியில் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்காளதேசம்

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.



இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.



அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும், மொகமது நயீம் 30 ரன்னும் எடுத்தனர்.



ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறியது. 



11 ரன்னுக்குள் முன்னணி 3 வீரர்களை வெளியேற்றினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.



இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.



வங்காளதேசம் சார்பில் நசும் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்

Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம

Mar05

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை

Mar05

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற

Sep16

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Aug13

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன

Jul24

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ

May18

சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச

Sep21

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்