More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நிறைவுபெற்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு... படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ராஜமௌலி !
நிறைவுபெற்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு... படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ராஜமௌலி !
Aug 19
நிறைவுபெற்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு... படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய ராஜமௌலி !

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனில் நிறைவுபெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 



ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பில் உருவாகி வருகிறது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்.  இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை  டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்து வருகிறது. 



இப்படத்தில் அஜய் தேவ்கன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று  ஆலியா பட் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இப்படம் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. 



இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த காட்சிகளை படமாக்க கடந்த மாதம் ராஜ மௌலி மற்றும் படக்குழுவினர் உக்ரைன் நாட்டிற்கு சென்றனர். அங்கு பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்நிலையில் 15 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முற்றிலும் நிறைவுபெற்று விட்டது. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த மகிழ்ச்சியில் படக்குழுவினரோடு இணைந்து ராஜமௌலி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  இன்னும் பேட்ச் ஒர்க் எனப்படும் சில காட்சிகள் எடுக்கப்படவிருக்கிறது. அந்த படப்பிடிப்பும் விரைவில் முடிந்தவிடும் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் கொரானாவால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் திட்டமிட்டப்படி வெளியாவது சந்தேகமே என கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு

Mar07

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

Jan17

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர

Sep10

பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Apr04

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி

Sep28

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள

Jul25

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ

Mar13

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப

Jul18

சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப

Dec11

திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக்

Apr06

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி