ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆப்கானில் வசிக்கும் மற்ற நாட்டவர்களை அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.தலிபான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது.
