More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முதல்வர் ஸ்டாலினுக்குக் சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!
முதல்வர் ஸ்டாலினுக்குக் சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!
Aug 28
முதல்வர் ஸ்டாலினுக்குக் சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கும் நலத்திட்ட  நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் எமது ஈழத்தமிழர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  முன்னெடுக்க ஆலோசித்துள்ள அகதி முகாம்களில் வாழும்  ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின்  உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்துக்கு மீளக்குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.



முதன்முறையாக தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமையானது ஓர்  ஆக்கபூர்வமான செயலாகும்.



இதற்காக எமது மக்கள் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பிலும்  உளம் கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar01

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு

Sep17

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ

Sep20

நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

Mar02

எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற

Mar20

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி

May02

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Mar15

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட

Mar07

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்

Jan23

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள

Apr15

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ

Jun08

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து

Jul01

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம