More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்!
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்!
Aug 28
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்!

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாற்றுக்கிழமை ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திங்கள் கிழமை முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.





 இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா பரவிய மாநிலம் கேரளா ஆகும். இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கு தொற்று பரவினாலும் தற்போது பெரும்பாலானா மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதேவேளையில் கேரளாவில் இன்னும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. தற்போதுவரை பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தன் உள்ளது. அதன்படி கடந்த 2 மாதமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.



இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதத்திற்கு பிறகு 4 நாட்களாக  தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின் கேரளாவில் கொரோனா அதிகரித்து சி வரும் நிலையில் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.



அதில் கேரளாவின் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டியத்தில் பண்டிகை நாட்களில் கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun22

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ

May26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர

Mar05

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான

Feb23

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ

Jul26

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Jun07

 பெரும்போகம்

2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர

Jul17

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப

Jun19

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த

Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Jul19

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட

Dec30

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Oct05

புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப

Apr07

கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்

May12

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்